/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பார்சல் லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
/
பார்சல் லாரியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ADDED : நவ 21, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:பழனி, சத்திரப்பட்டி பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த பார்சல் சர்வீஸ் லாரியில் சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தன.
இதைத்தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த மதுரை வாடிப்பட்டி மேலக்கால் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மகேந்திரன், 31, என்பவரை கைது செய்தனர். மதுரை திருப்பாலையை சேர்ந்த, கணேஷ்குமார் தான் நடத்தும் பார்சல் சர்வீஸ் லாரிகள் மூலமாக பாலக்காட்டிற்கு, ரேஷன் அரிசியை கொண்டு சென்றது தெரிந்தது. கணேஷ்குமாரை கைது செய்த போலீசார் கண்ணன், ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கிய கேரள நபரையும் தேடுகின்றனர்.

