/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர்
/
மங்கமனுாத்து சந்தியாகப்பர் சர்ச் தேர்
ADDED : ஜூலை 26, 2025 04:10 AM

செந்துறை: மங்கமனுாத்து புனித சந்தியாகப்பர் சர்ச் திருவிழா தேர் பவனி நடந்தது.
இவ்விழா ஜூலை 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியதைத்தொடர்ந்து 18 முதல் 22- வரை தினமும் நவநாள் திருப்பலி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேர் பவனி நடைபெற்றது.
இதையொட்டி அன்றைய தினம் காலை புதுநன்மை திருப்பலி நடைபெற்றது. திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, தஞ்சை ஆயர் சகாயராஜ், சுல்தான்பேட்டை முதன்மைகுரு மரியஜோசப் தலைமையில் மந்திரித்து ஆசீர்வதித்த பின் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் வாணவேடிக்கையுடன் 5 புனிதர்களின் தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று காலை தேர் திருப்பலி , இரவு 7:00 மணிக்கு நற்கருணை ஆசீர்,கொடியிறக்கம் நடைபெற்றது.