நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி நகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவமுகாம், அண்ணாமலை நகர் நல சுகாதார நிலையத்தில் நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை, சீருடைகள் வழங்கப்பட்டன . 19 வகையான சிகிச்சை செய்யப்பட்டன .
நகராட்சி துணைத் தலைவர் கந்தசாமி, நகர் நல அலுவலர் மனோஜ் குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் கலந்து கொண்டனர்.
வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன் தலைமை வகித்தார். செயல்அலுவலர் பத்மலதா முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கணேசன் வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் மனோஜ்பிரபு, அசோக் பங்கேற்றனர்.