ADDED : நவ 06, 2026 08:59 PM
அ நிறம் | அளவு
தொப்பம்பட்டி: பழநி தொப்பம்பட்டி வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக்குழு, தேசிய குழந்தைகள் நலத்திட்ட குழு இணைந்து நடத்திய முகாமில் 55 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆராய்ச்சி நிலைய தலைவர் தங்கஹேமாவதி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் ரமேஷ்குமார், கோகுல், காயத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
