ADDED : மே 09, 2025 05:41 AM
கரூர்: கரூர் என்.எஸ்.என்., பொறியில் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் சென்னை அப்பெக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தொழில் நுட்ப திறன்பயிற்சி, தொடர்பியல், திறன் வளர்ச்சி, வேலை வாய்ப்புத் திறன் பயிற்சி உள்ளிட்ட மாணவர்களின் திறன்களை 2ம் ஆண்டிலேயே பயிற்சி மூலம் மேம்படுத்திடவும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பு பெற்றிடவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்திடும்.
பொறியில் துறையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களுக்கு எளிதில் கல்லுாரிலேயே கிடைக்கபெற உதவும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லுாரியின் செயலாளர் நல்லுசாமி கையெழுத்திட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
உடன் கல்லுாரியின் துணைத்தலைவர் நல்லசாமி, இயக்குனர், பேராசிரியர் பழனியப்பன், முதல்வர் சண்முகப்பிரியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.