/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொப்பம்பட்டியில் விளையாட்டு மைதானம் அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
தொப்பம்பட்டியில் விளையாட்டு மைதானம் அமைச்சர் சக்கரபாணி தகவல்
தொப்பம்பட்டியில் விளையாட்டு மைதானம் அமைச்சர் சக்கரபாணி தகவல்
தொப்பம்பட்டியில் விளையாட்டு மைதானம் அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : அக் 24, 2025 02:40 AM

ஒட்டன்சத்திரம்: தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்ற வருவதாக'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தொப்பம்பட்டி தாழையூத்து ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:
சென்னை அடையாறு அண்ணா இன்ஸ்டிடியூட் அடுத்தபடியாக ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டி தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பிரசன்னா, பி.டி.ஓ.,க்கள் தாஹிரா, குமரன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி கலந்து கொண்டனர்.