/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிக மாணவர்கள் அரசு பணியில் சேர வேண்டும்; மாணவர்களிடையே அமைச்சர் சக்கரபாணி பேச்சு
/
அதிக மாணவர்கள் அரசு பணியில் சேர வேண்டும்; மாணவர்களிடையே அமைச்சர் சக்கரபாணி பேச்சு
அதிக மாணவர்கள் அரசு பணியில் சேர வேண்டும்; மாணவர்களிடையே அமைச்சர் சக்கரபாணி பேச்சு
அதிக மாணவர்கள் அரசு பணியில் சேர வேண்டும்; மாணவர்களிடையே அமைச்சர் சக்கரபாணி பேச்சு
ADDED : ஏப் 12, 2025 05:54 AM

ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு அரசு போட்டி தேர்வு மையத்தில் படிக்கும் மாணவர்களில் அதிகமானோர் அரசு பணியில் சேர வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் ரூ.33.33 லட்சம் மதிப்பீட்டில் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் உட்பட மொத்தம் ரூ 89.33 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி திறந்து வைத்தனர். தொடர்ந்து காளாஞ்சிபட்டி கலைஞர் நூற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:
இப்பயிற்சி மையத்தில் படித்த 2 பேர் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 முதல்நிலை தேர்விலும், தொகுதி 2 தேர்வில் 15 பேரும், தொகுதி 4 தேர்வில் 7 பேரும் இதுவரை வெற்றி பெற்றுள்ளனர். மையத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய ஆட்சி பணி, காவல் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், மத்திய அரசு பணியில் உள்ள பல்வேறு அலுவலர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிகு பயிற்சியாளர்களை கொண்டு வீடியோ கான்பரன்ஸ் முறையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த போட்டித் தேர்வு மையத்தில் படிப்போர் அதிகளவில் அரசு பணியில் சேர்ந்து இந்த சமுதாயத்துக்கு நல்ல முறையில் சேவை செய்து பெருமை அடைய வேண்டும்.
கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., காந்தி ராஜன் முன்னிலை வகித்தனர். பழநி ஆர்.டி.ஓ, கண்ணன், கட்டடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் தங்கவேல், தாசில்தார் பழனிச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி.
அவைத் தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், எஸ்.ஆர்.கே பாலு, பொன்ராஜ், சுப்பிரமணி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய அவைத் தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்.