/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சொந்த செலவில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்

ADDED : பிப் 07, 2026 06:03 AM

சித்தையன்கோட்டை: ''சொந்த செலவில் டெபாசிட் தொகையை செலுத்தி சித்தையன்கோட்டை குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
சித்தையன்கோட்டை பேரூராட்சி சேடபட்டியில் நடந்த தார் ரோடு, தரைமட்ட தண்ணீர் தொட்டி, 500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல் உட்பட 3 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: சித்தையன்கோட்டை பகுதி விவசாயிகள் நலனுக்காக சிமென்ட் வாய்க்கால், நீர் வரத்து வாய்க்கால் மேம்பாடு, தார் ரோடு உள்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியின் நீண்ட கால குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பல கோடி ரூபாய் நிதியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க., ஆட்சியின் போது புதிய குடிநீர் இணைப்புகளுக்காக ஒரு பகுதி மக்களுக்கான டெபாசிட் தொகையை எனது சொந்த செலவில் செலுத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.
பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜெயமாலு, துணைத்தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர்.