/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.123 கோடியில் கால்வாய்களை துார்வார திட்டம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

ADDED : ஜன 05, 2024 04:49 AM

கன்னிவாடி ; ''ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ரூ. 123 கோடியில் வரத்து கால்வாய்களை துார் வார மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக,'' அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரம் பகுதி ஊராட்சிகளில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற
அவர் பேசியதாவது: விடுபட்ட அனைவருக்கும் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோனுாரில் துணை சுகாதார நிலையம், அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவருடன் கூடுதல் வகுப்பறை கட்டப்பட உள்ளது. முடிந்த ஆண்டுகளில் ரூ. 6 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று உள்ளது. அரசு நலத்திட்டங்களை வழங்குவதில் ஆத்துார் தொகுதியை தன்னிறைவு பெற்றதாக மாற்றும் நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் என்றார்.
வேலுச்சாமி எம்.பி., திட்ட இயக்குனர் திலகவதி, ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, தி.மு.க., மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, ஊராட்சி தலைவர்கள் வெள்ளைத்தாய் தங்கபாண்டியன், கசவனம்பட்டி சக்தி, ஒன்றிய கவுன்சிலர் திருப்பதி, துணை த்தலைவர்கள் ஜோதிமுருகன் பங்கேற்றனர்.