ADDED : மே 17, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநிக்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வந்தார்.
பழநியாண்டவர் கலை பண்பாட்டு கல்லுாரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். அதன் பின் பழநி முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பழநியில் ஆதிதிராவிடர் நலத்துறை கட்டடப் பணிகளை ஆய்வு செய்தேன். பணப் பற்றாக்குறையால் கட்டட பணிகள் பாதிக்கவில்லை என்றார்.