sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஓட்டு எண்ணாமலேயே வெற்றி பெற வேண்டும்: சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

/

ஓட்டு எண்ணாமலேயே வெற்றி பெற வேண்டும்: சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

ஓட்டு எண்ணாமலேயே வெற்றி பெற வேண்டும்: சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

ஓட்டு எண்ணாமலேயே வெற்றி பெற வேண்டும்: சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி


ADDED : மார் 19, 2024 05:54 AM

Google News

ADDED : மார் 19, 2024 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''ஓட்டு எண்ணாமலேயே நமது கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாக கருத வேண்டும்,''என, அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க.,சார்பில் திண்டுக்கல்லில் நடந்த வேட்பாளர் அறிமுகம்,நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் வெற்றிக்காக ஓட்டுக்களை எண்ணி முடிக்கிற வரை தனிப்பட்ட வேலைகளை ஒதுக்கி வைத்து அனைவரும் பாடுபட வேண்டும்.

ஓட்டு எண்ணாமலேயே நமது வேட்பாளர் வெற்றி பெற்றதாக கருத வேண்டும். திண்டுக்கல் தொகுதியின் வெற்றிதான் இந்தியாவின் முதல் வெற்றியாக இருக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் பணியாற்றிய தோழரை தான் நமக்கு வேட்பாளராகத் தந்து இருக்கிறார்கள். நகரம் மட்டுமல்லாது அனைத்து கிராமங்களிலும் நகரம் போல் ஒட்டுகள் கிடைக்க பாடுபட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற முறையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் அமைச்சருமான சக்கரபாணி பேசியதாவது: திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார் என்று புரிந்து பணியாற்ற வேண்டும்.

சின்னத்தை வீடுதோறும் கொண்டு செல்ல வேண்டும். திண்டுக்கல் வெற்றிதான் 40 தொகுதியிலும் வெற்றி என்றப்படி பணியாற்ற வேண்டும். கவர்னர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இந்தியாவிலே அதிக ஓட்டுகளுடன் வெற்றிப் பெற்ற தொகுதி திண்டுக்கல் என்பதால் வேட்புமனு தாக்கல் போது அதிகமானவர்களை திரட்ட வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் கூட்டணி கட்சியினர் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டார்.

கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும் பழநி எம்.எல்.ஏ.,யுமான செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, மேயர் இளமதி,துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அவைத்தலைவர்கள் மோகன்,காமாட்சி,துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், சிவகுருசாமி, முருகேசன், மணி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us