/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துணை முதல்வர் வருகை கட்டடங்களை எம்.எல்.ஏ., ஆய்வு
/
துணை முதல்வர் வருகை கட்டடங்களை எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : செப் 27, 2025 04:32 AM
வேடசந்தூர்: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள அரசு கட்டடங்களை, எம்.எல்.ஏ., காந்திராஜன் ஆய்வு செய்தார்.
வேடசந்துார் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்.9 ல் வேடசந்துாரில் நடக்கிறது.
இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி, 9 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் வேடசந்துார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டடம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ,மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டடங்களை திறந்து வைக்கிறார் இக் கட்டடங்களை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்தி ராஜன் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.
டாக்டர் லோகநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், நிர்வாகிகள் கவிதா முருகன், மாரிமுத்து, சாகுல் ஹமீது, கற்பகம், வேல்முருகன், அரசு ஒப்பந்ததாரர் பாண்டியன் பங்கேற்றனர்.

