/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2026லும் தி.மு.க., ஆட்சி அமைக்கும் எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேச்சு

ADDED : மார் 28, 2025 04:57 AM

பழநி : ''2026ல்திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்'' என பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசினார்.
பழநி ஆர்.எப். ரோட்டில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கொரோனா காலத்தில் வருவாய் இல்லாமல் தமிழக அரசு சிரமம் அடைந்தது.
மத்திய அரசு ரூ.100 வரி செலுத்துவதற்கு ரூ.50 மட்டும் தந்தது.
ஆனால் வட மாநிலங்களுக்கு ரூ.லட்சக்கணக்கான கோடி தாரை வார்க்கப்பட்டது. அங்கு வேலை இன்மை காரணமாக அங்குள்ள மக்கள் தமிழகத்தில் வேலை தேடி வருகின்றனர்.
மின் உற்பத்தியில் தமிழ்நாடு மிகை மாநிலமாக உருவெடுக்கிறது.ஹிந்தியை படிக்க வேண்டாம் என சொல்லவில்லை தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மட்டுமே இருக்க வேண்டும் என்றார்.
மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகரச் செயலாளர் வேலுமணி, முகமது இப்ராஹிம், ஒன்றிய செயலாளர்கள் சவுந்தரபாண்டின், சுவாமிநாதன், கருமலை பாண்டியன், ராஜதுரை, நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, நகர் இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் பங்கேற்றனர்.