/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடால் பரிதவிக்கும் வாகனஓட்டிகள்.
/
சேதமான ரோடால் பரிதவிக்கும் வாகனஓட்டிகள்.
ADDED : ஜன 22, 2024 05:41 AM

சேதமான ரோடால் பாதிப்பு
திண்டுக்கல் -தாடிக்கொம்பு செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது. இதனால் கற்கள் அங்கும் இங்குமாய் சிதறி கிடக்கிறது. வாகன ஓட்டிகள் இவ்வழியில் செல்லும் போது தடுமாறி கீழே விழுகின்றனர். ரோடை சீரமைக்க வேண்டும். வினோத் குமார், திண்டுக்கல்.-----
உடைந்த பைப்பால் வீணாகும் குடிநீர்
சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் நத்தம் நெடுஞ்சாலையில் காவிரி கூட்டு குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் குடிநீருடன் கழிவு நீரும் கலக்கும் அபாயமும் உள்ளது. இதை அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பந்தளராஜா, வீரசின்னம்பட்டி.-------
ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பம்
மோர்ப்பட்டியிலிருந்து பாரதிபுரம் செல்லும் ரோட்டோரம் இருக்கும் மின்கம்பத்தில் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் தேவாங்கு உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. செடிகளை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன், வடமதுரை.--------
பயன்பாடில்லா கட்டடம்
பாச்சலுார் கடைசிக்காட்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலக கட்டடம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடைக்கிறது. இதனால் புகார்கள் மண்டி விஷ பூச்சிகள் அதிகமாக உலாவுகிறது. இக்கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்த்தி, பாச்சலுார்.---------
சேதமான பெயர்பலகையால் தடுமாற்றம்
திண்டுக்கல் நாகல் நகர் அண்ணாமலையார் பள்ளி ரோட்டில் வைக்கப்பட்ட பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் பாதை தெரியாமல் சிலர் வழி தெரியாம் தடுமாறுகின்றனர். பெயர் பலகையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னதம்பி, நாகல்நகர்.---------
கொசு உற்பத்தியாக்கும் கழிவுநீர்
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி செல்லும் ரோடு அருகே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இங்கு கொசுக்கள் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. கழிவுநீர் தேங்காமல் தடுக்க ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பிகா, திண்டுக்கல்.----------
குப்பையால் உருவாகும் சீர்கேடு
பழநி பெரியநாயகியம்மன் கோயில் பின்புறம் பல நாட்களாக குப்பை அள்ளபடாமல் உள்ளது. தொடரும் இப்பிரச்னையால் இப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடாக உள்ளது. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும். கார்த்தி, பழநி.
...............................................................
--------