/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
/
ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 17, 2025 05:38 AM

கால்நடைகளால் விபத்து : திண்டுக்கல் கச்சேரி தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆங்காங்கே சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--வனிதா, திண்டுக்கல். ------
ஆக்கிரமிப்பால் அவதி : திண்டுக்கல் சி.டி.ஓ. காலனி 1வது தெருவில் மின்கம்பத்தில் கீழ் பகுதியில் தகர செட்டு போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. ஒயர்கள் பழுது சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஸ்வரன், திண்டுக்கல்.
--------பள்ளத்தால் பரிதவிப்பு : எரியோடு அரசு மாணவர் விடுதி அருகில் ரோடு வளைவில் இருக்கும் பள்ளத்தில் டூவீலர்கள் தடுமாறி விழுகின்றன. இதனால் பலரும் விபத்தில் சிக்குகின்றனர். பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். --- -மணி, எரியோடு.
--------தொற்று பரப்பும் கழிவுநீர் : பழநி சுப்ரமணியபுரம் ரோடு சங்கர்ராமன் மருத்துவமனை அருகே சாக்கடையில் குப்பை அடைத்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. சில நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேல்முருகன், பழநி.
-------சேதமான கட்டடம் : நிலக்கோட்டை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலக கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏதேனும் அசாம்பாவிதம் ஏற்படும் முன் கட்டடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.அய்யர்பாண்டி, நிலக்கோட்டை.----------
குப்பையால் சீர்கேடு : பழநி சித்தாநகர் சிவன்கோயில் செல்லும் ரோட்டில் அதிகப்படியான குப்பை பாலிதீன் பைகள் குவிந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜின்னா, மானுார்.---------
ஜோராக நடக்கும் கொசு உற்பத்தி : திண்டுக்கல் ஜி.எஸ்.நகரில் சாக்கடை கால்வாயில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மேரி, ஜி.எஸ்.நகர்.----------