/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
என்.சி.சி., மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி
/
என்.சி.சி., மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி
ADDED : நவ 24, 2025 09:27 AM
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி குதிரைஆறு அணைப்பகுதியில் என்.சி.சி., மற்றும் பள்ளி மாணவர்கள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர்.
பழநியில் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் தமிழக 14வது பட்டாலியன் சார்பில் என்.சி.சி., மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு குதிரையாறு அணைப்பகுதியில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பழநியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரி, ஐ.டி.ஒ மேல்நிலைப்பள்ளி, பழநி நகராட்சி, குருவப்பா, ஸ்ரீ வித்யா மந்திர், கிரசன்ட், பாரத் வித்யா பவன் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் பட்டாலியன் கமாண்டண்ட். லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன், துணை கமாண்டண்ட். லெப்டினன்ட் கர்னல் நவநீத் கணேஷ், தேசிய மாணவர் படை அதிகாரிகள் பாக்கியராஜ், பழனிசாமி, மணிவேல், தர்மராஜ், ஷங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

