/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் முகூர்த்தக்கால்
/
கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் முகூர்த்தக்கால்
கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் முகூர்த்தக்கால்
கோட்டைமாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் முகூர்த்தக்கால்
ADDED : ஜன 25, 2024 05:45 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி முகூர்த்த கால் நடப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு மாசித்திருவிழா பிப். 8ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி மாசித்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நேற்று முகூர்த்த கால் ஊன்றுதல் நடைபெற்றது.
இதையொட்டி காலை 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கோட்டை மாரியம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
முகூர்த்த காலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை செய்ய ஊன்றப்பட்டது. கோயில் பரம்பரை அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.