/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாகம்மாள், மதுரைவீரன் கோயில் விழா
/
நாகம்மாள், மதுரைவீரன் கோயில் விழா
ADDED : ஆக 06, 2025 12:36 AM

நத்தம் : நத்தம் செந்துறை சாலையில் உள்ள கழுகுகருப்பு நாகம்மாள் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது.
இதனையொட்டி ஜூலை 26-ல் அழகர்கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு சந்தனக்கருப்பு சுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சந்தன கருப்பு சுவாமி கோயிலில் பொங்கல் , முளைப்பாரி ஊர்வலத்துடன் கரகம் ,அக்னிசட்டி எடுத்து வருதல் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
நத்தம் : காந்திநகர் மதுரைவீரன் கோயில் தெருவில் அமைந்துள்ளமதுரைவீரன் சுவாமி, நாகம்மாள் கோயில்களில் ஆடி திருவிழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம், குத்து விளக்கு பூஜையும் நடைபெற்றது.