/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுச்சூழலை பாதுகாத்து குப்பையை உரமாக்கும் நத்தம் பேரூராட்சி
/
சுற்றுச்சூழலை பாதுகாத்து குப்பையை உரமாக்கும் நத்தம் பேரூராட்சி
சுற்றுச்சூழலை பாதுகாத்து குப்பையை உரமாக்கும் நத்தம் பேரூராட்சி
சுற்றுச்சூழலை பாதுகாத்து குப்பையை உரமாக்கும் நத்தம் பேரூராட்சி
ADDED : பிப் 19, 2024 05:41 AM

சுற்றுச்சூழலை பாதுகாத்து குப்பைகளை உரமாக்கி விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்கின்றனர் நத்தம் பேரூராட்சியினர்.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன், கண்ணாடி என மக்காத குப்பை இயற்கைக்கும், மண்ணிற்கும் பெரும் சவாலாக உள்ளது. மனிதர்களால் பயன்படுத்திவிட்டு குப்பையில் வீசப்படும் இக்கழிவுகளை மறுசுழற்சி செய்யாது தீயிட்டு எரிப்பதை நாம் கண்கூட பார்க்கிறோம்.
இதன் மூலம் இயற்கை மாசுபடுவதுடன் இதன் புகை காற்றுடன் கலக்க மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் 2013 முதல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துகிறது நத்தம் பேரூராட்சி. இதன் மூலம் நத்தம் பேரூராட்சி பகுதிகளிலிருந்து தினசரி வரும் பல டன் திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பையாக பிரித்து மதிப்புள்ள பொருட்களை வருவாயாக மாற்றுவதுடன் குப்பையை உரமாக்கி விவசாயம் செழிக்க உறுதுணையாகயும் உள்ளது.
இந்த குப்பை உரங்களை விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ.500 என்ற குறைவான விலையில் வழங்குகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் மட்டுமின்றி இப்பணிகளில் மகளிர் சுய உதவி குழு பணியாளர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கும் வருவாய் ஏற்படுத்தித்தருகிறது.
விவசாயிகள் வாங்குகின்றனர்
செல்வி சித்ரா மேரி, பேரூராட்சி துப்புரவுப்புரவு ஆய்வாளர், நத்தம்: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துாய்மை பணியாளர்கள் ,மகளிர் சுய உதவி குழு பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் காலை 6:00 மணி முதல் பேரூராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் நேரடியாக வீடுகளுக்குசென்று குப்பையை சேகரிக்கின்றனர்.
மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து மறுசுழற்சி பொருட்களை தனியாக சேகரிக்கின்றனர். மறு சுழற்சி பொருட்களை விற்பதன் மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வருமானம் கிடைக்கிறது.
மக்கும் குப்பை உரக்குழிகளில் கொட்டப்பட்டு 45 நாட்களுக்குப் பின் அது உரமாக கிடைக்கிறது. இதை விவசாயிகளுக்கு ஒரு டன் ரூ.500 என குறைவான விலை யில் கொடுப்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். விவசாயத்திற்கு உரம் தேவைப்படுபவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம்
சேக் சிக்கந்தர் பாட்ஷா,பேரூராட்சி தலைவர், நத்தம்: சுகாதாரம்,சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் நத்தம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் எனது நேரடி மேற்பார்வையில் செயல் படுகிறது. இதன் மூலம் குப்பையை மக்கள் தீயிட்டு கொளுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. மாதம் 6 டன் அளவிற்கு பாலிதீன் கவர்களை மறுசுழற்சி செய்ய அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் குப்பையை உரமாக்கி விவசாயிகளுக்கு குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மகளிர் சுய உதவி குழு பணியாளர்களுக்கு தினசரி வேலையும் அதன் மூலம் வருவாயும் கிடைக்கிறது.இந்த வருவாய் சொற்பமாக இருந்தாலும் சுற்றுச்சூழல்,காற்று மாசு படுவதை தடுக்க இந்தச் செயல்முறை அவசியமாகிறது. இதோடுவிரைவில் மண்புழு உரம் தயாரிக்கும் திட்டமும் செயல்படுத்தப் பட உள்ளது.

