UPDATED : நவ 01, 2026 06:50 PM
ADDED : நவ 01, 2026 06:46 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: வேடசந்துார் தனியார் வேளாண் பொறியியல் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் சார்பில், தாடிக்கொம்பு அரசு உயர்நிலை பள்ளியில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பானுரேகா, ஊராட்சி தலைவர் கவிதா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை, நாட்டுப்பற்று, சமூக நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் நடத்தப்பட்டன. மாணவிகள் ஆர்த்தி, அபிதாஸ்ரீ ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
