ADDED : அக் 15, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டப வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ.,கட்சியின் தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா செயலாளர் சின்னகருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
நத்தம் பகுதியில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க கோரியும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க கோருவது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய தாலுகா செயலாளராக நத்தம்- அசோக் நகரை சேர்ந்த குழந்தைவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராணி, ஆஸாத், தாலுகா குழு உறுப்பினர்கள் சுமதி, ஜபார், லெட்சுமணன் பங்கேற்றனர்.