/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்தலில் தேவை கெடுபிடி; அலட்சியத்தால் வாகன விபத்து , உயிர் பலி அதிகரிப்பு
/
மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்தலில் தேவை கெடுபிடி; அலட்சியத்தால் வாகன விபத்து , உயிர் பலி அதிகரிப்பு
மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்தலில் தேவை கெடுபிடி; அலட்சியத்தால் வாகன விபத்து , உயிர் பலி அதிகரிப்பு
மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்தலில் தேவை கெடுபிடி; அலட்சியத்தால் வாகன விபத்து , உயிர் பலி அதிகரிப்பு
ADDED : ஆக 12, 2025 05:31 AM

கன்னிவாடி : திண்டுக்கல் மாவட்டத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளை முழுமையாக அமல்படுத்துவதின் அலட்சியத்தால் வாகன விபத்துக்கள் உயிர் பலி எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
டூவீலர் , நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப விபத்துக்களும் சாதாரணமாகி வருகிறது. இந்திய சாலை போக்குவரத்து அமைச்சக அறிக்கையில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 51 விபத்துக்களில் 17 இறப்புகள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வாகன எண்ணிக்கை அதிகரிப்பு, போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, குறுகலான நான்கு வழி சாலைகளில் எதிர் திசை, அதிவேக பயணம், காரில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாதிருத்தல் போன்ற சாலை விதிகளை மீறுவதால் பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் சமீபத்திய நாட்களில் அரங்கேறிய விபத்துக்கள், கோர பதிவுகளை ஏற்படுத்தி உள்ளன. இவற்றின் மூல காரணமாக சாலை விதி மீறல்கள் உள்ளன. ஹெல்மெட், சீட் பெல்ட் பிரச்னை போன்று, தனியார் பஸ்களின் அசுர வேகமும், அரசு பஸ்களின் பராமரிப்பற்ற உதிரி பாகங்களும் விபத்து காரண பட்டியலில் முக்கிய இடம் பெறுகின்றன.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் சேதமடைந்த ரோடு, ஆழமான குழிகள், விபத்து அபாயத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் இரும்பு தடுப்புகள், தேவையற்ற இடங்களில் உயரமான வேகத்தடைகள், போதிய அறிவிப்பு பலகை இல்லாத குறுகிய திருப்பங்கள் என நெடுஞ்சாலை துறையின் அலட்சிய காரணங்களும் இப்பட்டியலில் உள்ளன.
கண்காணிக்க வேண்டிய போலீசார், பெயரளவில் டூவீலர் ஓட்டிகளிடம் மட்டுமே கடுமை காட்டுகின்றனர். சிபாரிசு, கவனிப்பு போன்றவற்றால் விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை. வெறுமனே நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்வது வசூல் ஆகியவற்றுடன் கண்டுகொள்ளாமல் விடுவதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. போலீஸ் பற்றாக்குறை, பணிச்சுமை போன்ற காரணங்களை கூறி இப்பணியில் தொய்வு ஏற்படுத்துகின்றனர். சமூக விரோத செயல்கள் மட்டுமின்றி உயிர் பலி அரங்கேற்றும் கோர விபத்துக்களும் வாடிக்கையாகி வருகிறது.
சாலை விதிகள், மீறல்கள், பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தலை அதிகப்படுத்த வேண்டும். விதிமீறல் மீது கெடுபிடியான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
--.........
வேகக்கட்டுப்பாட்டு கருவி அவசியம்
மாவட்ட எல்லை , நான்கு வழிச்சாலையில் ரோந்து, வாகன தணிக்கை என போலீசார் நியமித்தபோதும் உரிமம் இல்லாத நபர்கள் டூவீலர் , ஆட்டோ, கார், சரக்கு வாகனங்களை இயக்குவது வழக்கமாகிவிட்டது. தனியார் பஸ்கள் வருவாய் நோக்கில் நகர் பகுதிகளில் மெதுவாகவும், நேரத்தை ஈடு செய்ய பிற இடங்களில் அதிவேக பயணத்தையும் மேற்கொள்கின்றன. தனியார் பஸ்களின் அசுரவேக பயணத்தை தடுக்கும் வகையில் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் நிறுவப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசியல், செல்வாக்கு நபர்களின் பரிந்துரைகளை புறக்கணித்து ஹெல்மெட், சீட்-பெல்ட், லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும். இவற்றை முறைப்படுத்தினால் மட்டுமே வாகன விபத்துக்கள், உயிர் இழப்புகளை பெருமளவு குறைக்க முடியும்.
அபிஹருணி ,கல்லுாரி மாணவி, கன்னிவாடி .
-