/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாமன்கள் நட்டு வைத்த வழுக்கு மரத்தில் ஏறி மருமகன்கள் சாகசம் வத்தலக்குண்டு அருகே விசித்திரமான போட்டி

ADDED : ஜன 16, 2025 05:47 AM

வத்தலக்குண்டு: விராலிப்பட்டியில் நடந்த பொங்கல் விழாவில் மாமன்களால் நட்டு வைக்கப்பட்ட வழுக்குமரத்தில் மருமகன்கள் ஏறும் விளையாட்டுப் போட்டி நடந்தது.
மேற்கு வீட்டு பங்காளிகள் எனும் மாமன் முறை கொண்டவர்கள் ஊர் மைதானத்தில் 11 ஆயிரம் பரிசு பணத்தை கட்டி வழுக்கு மரத்தை நட்டு வைத்தனர். பின்னர் மருமகன், மாப்பிள்ளை உறவுமுறை கொண்டவர்களை வழுக்கு மரம் ஏறுவதற்கு அழைப்பு விடுத்தனர்.
கேலியும் கிண்டலுமாக மாமன்கள் விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டு வந்த மருமகன்களை மாலை அணிவித்து வரவேற்ற மாமன்கள் வழுக்கு மரம் ஏறி பரிசுகளை பெற உற்சாகப்படுத்தினர்.
இதை தொடர்ந்து மருமகன் உறவு முறை கொண்ட பெரியவர்கள், இளைஞர்கள் என பலர் வழுக்கு மரத்தில் ஏறி பரிசு பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மரம் ஏறிய மருமகன்களை தண்ணீர் ஊற்றி மாமனார்கள் தடுத்து கீழே இழுத்தனர்.
விளையாட்டு என்று இல்லாமல் மாமன், மருமகன் உறவுகளை கொண்டாடும் விதமாக வழக்கு மர போட்டி அமைந்தது. போட்டி நேரத்திற்குள் மருமகன்கள் பரிசு தொகையை எடுக்க முடியாததால் மாமனார்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.