/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் சர்ச்,கோயில்களில் புத்தாண்டு வழிபாடு
/
திண்டுக்கல்லில் சர்ச்,கோயில்களில் புத்தாண்டு வழிபாடு
திண்டுக்கல்லில் சர்ச்,கோயில்களில் புத்தாண்டு வழிபாடு
திண்டுக்கல்லில் சர்ச்,கோயில்களில் புத்தாண்டு வழிபாடு
ADDED : ஜன 02, 2025 05:39 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மக்களும் நள்ளிரவில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சர்ச்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. துாய வளனார் சர்ச் துாய பவுல் சர்ச், மேட்டுப்பட்டி சர்ச், முத்தழகுபட்டி சர்ச், மரியநாதபுரம் சர்ச், கிழக்கு ஆரோக்கியமாதா சர்ச், தோமையார்புரம், சவரியார் பாளையம், குமரன் திருநகர், என்.ஜி.ஓ., காலனி, ரவுண்ட் ரோடு சி.எஸ்.ஐ., வேடபட்டி சர்ச் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்ச்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறினர்.
திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்தோடு விளக்கேற்றி வரிசையின் காத்திருந்து தரிசனம் செய்தனர். சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோயில்,ரயில்வே ஸ்டேஷன் ரயிலடி விநாயகர் கோயில்,பாரதிநகர் புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர் வரதராஜபெருமாள் கோயில், வெள்ளை விநாயகர் கோயில், செல்வ விநாயகர், 108 நன்மை தரும் விநாயகர் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், கூட்டுறவு நகர் பெருமாள் கோயில், நந்தவனப்பட்டி ரோடு வழிகாட்டி விநாயகர், செல்லாண்டியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள்,சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
அனைத்து தரப்பு மக்களும் நள்ளிரவு 12 :00 மணிக்கு பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர்.
கேக்வெட்டிய எஸ்.பி.,
* திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் அருகே ஏராளமான மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதற்காக காத்திருந்தனர். அப்போது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் அங்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவரையும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்தனர். அவரும் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கேக் வெட்டி சிறுவர்களுக்கு ஊட்டி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். போலீசாரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறினர். அங்குள்ள பொதுமக்கள் போலீசாருடன் புகைப்படம் எடுத்து தங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
* கன்னிவாடி குட்டத்துப்பட்டி புனித அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டு ஆராதனைகள் நடந்தது. பாதிரியார் சவுந்தர் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது. ஆராதனைகளுக்கு பின் ஏராளமானோர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கு.ஆவரம்பட்டி புனித சவேரியார் சர்ச்சில் பாதிரியார் நெப்போலியன் விழா திருப்பலி நிறைவேற்றினார். ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், வக்கம்பட்டி, கன்னிவாடி, காரமடை, கரிசல்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, எம்.அம்மாபட்டி உள்ளிட்ட சர்ச் மட்டுமன்றி வீடுகளும் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரித்து புத்தாண்டை கொண்டாடினர்.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் வள்ளி, தேவசேனா, சிவசுப்பிரமணியருக்க மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் வெண்பட்டு உடுத்தி திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
* ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தை வேலப்பர் கோயிலில் குழந்தை வடிவாக வீற்றிருக்கும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
*வடமதுரை தென்னம்பட்டி சவடம்மன் கோயிலில் ஆங்கில புத்தாண்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. யாக சாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. புஷ்ப, சொர்ண அலங்காரத்தில் மகா அபிஷேகம் நடந்தது. கோயில் மந்தை செல்வவிநாயகர், பாலமுருகன், நந்தீஸ்வரன், மதவானையம்மன், ஆலம்மன் கோயில்களிலும் அபிஷேகம் நடந்தது. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் , மீனாட்சியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன், ரயில்வே ஸ்டேஷன் ரோடு செல்வவிநாயகர், எரியோடு சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயில் , தென்னம்பட்டி சவடம்மன், காணப்பாடி முத்தம்மன், எரியோடு தாயம்மன் உட்பட பல்வேறு குல தெய்வ கோயில்களிலும் தலைக்கட்டுதாரர்கள் வழிபட்டனர்.
* வடமதுரை சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில் போதகர் பெஞ்சமின் தலைமையில் கிறிஸ்துமஸ் ஆராதனை, நடந்தது. திருமண்டல உறுப்பினர்கள் டேவிட், சாந்திஅருள், மோசஸ் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
*செந்துறை புனித சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார்கள் இன்னாசிமுத்து, இருதயம், லெவே வின்னர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து நன்றி ஆராதனை, நற்கருணை ஆசீர், பிரார்த்தனை நடந்தது.
*வத்தலக்குண்டு காளியம்மன், மாரியம்மன், விசாலாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. தோமையார் சர்ச், மேலகோயில்பட்டி சவேரியார், சின்னுபட்டி அந்தோணியார், மரியாயி பட்டி சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி நடந்தது.