ADDED : பிப் 09, 2024 05:01 AM
செஸ் போட்டி
திண்டுக்கல் : வேலம்மாள் போதி வளாகம்,ஆனந்த் செஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான செஸ் போட்டி பிப்.11ல் நடக்கிறது. 9,12,15 என வயது வாரியாக 3 பிரிவுகளாக நடக்கிறது. பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. எஸ்.எம்.எஸ்., அல்லது வாட்ஸாப் மூலம் பெயர்,பிறந்த தேதி போன்றவற்றை அனுப்ப வேண்டும். பதிவு செய்ய பிப்.10 கடைசி நாள். விவரங்களுக்கு ரமேஷ் குமார் - 98423 05886 என்ற எண்ணில் அணுகலாம்.
தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் : இந்திய அரசு, திறன் மேம்பாடு,தொழில் முனைவு அமைச்சரகம்,இயக்குநரகம், வேலைவாய்ப்பு,பயிற்சி துறை சார்பாக, மதுரை மண்டல அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்கள் இணைந்து பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்துகிறது. திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிப். 12ல் நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை,ராமநாதபுரம் அரசு,தனியார் தொழில்நிறுவனங்கள் பங்கேற்று தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்கின்றனர். இதில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் பங்கற்கலாம். விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451--2970049 என்ற எண்ணில் அணுகலாம்.

