ADDED : பிப் 13, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் நிலா பிள்ளை வழிபாடு நடத்தினர்
பழநி முருகன் கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு பெண்கள் நிலாபிள்ளை வழிபாடு நடத்துவது வழக்கம். தைப்பூச திருவிழா கொடியேற்றம் துவங்கும் நாளிலிருந்து தினமும் இரவு சர்க்கரை, பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் உள்ளிட்ட பொருட்களை வீட்டில் முன் உள்ள தெருவில் நிலாவிற்கு படைத்து பெண்கள் வழிபாடு செய்வர். பிள்ளையார் பிடித்து நிலா , முருகனுக்கு இனிப்புகள், பொங்கல் படைத்து கும்மிஅடித்து நிலா பிள்ளை வழிபாடு செய்தனர்.