/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
யணிகளுக்கு பயனற்று போகும் நிழற்குடைகள் இருந்தும் இல்லை ; சமூகவிரோதிகள் கூடரமாவதால் பயணிகள் அவதி
/
யணிகளுக்கு பயனற்று போகும் நிழற்குடைகள் இருந்தும் இல்லை ; சமூகவிரோதிகள் கூடரமாவதால் பயணிகள் அவதி
யணிகளுக்கு பயனற்று போகும் நிழற்குடைகள் இருந்தும் இல்லை ; சமூகவிரோதிகள் கூடரமாவதால் பயணிகள் அவதி
யணிகளுக்கு பயனற்று போகும் நிழற்குடைகள் இருந்தும் இல்லை ; சமூகவிரோதிகள் கூடரமாவதால் பயணிகள் அவதி
ADDED : நவ 02, 2025 04:10 AM

ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ் ஸ்டாப் நிழற்குடைகளை பராமரிப்பதில் அலட்சியத்தால் விபத்து அபாய சூழல் அதிகரித்து வருகிறது. சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த ரோந்து போலீசாரின் கண்காணிப்பை முடுக்கி விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 306 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் அத்தியாவசிய பணிகளில் குடிநீர் விநியோகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை அரசு வழங்குகிறது. இருப்பினும் இதனை முறையாக செயல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியம் காட்டி வருகின்றன.அடிப்படை வசதிகள் அளித்தலில் ஏட்டளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செலவின கணக்கு மூலம் பராமரிப்பு சார்ந்த பில்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவற்றை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கவனிப்பு, கூடுதல் ஆதாயம் போன்றவற்றால் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
மழை, வெயிலின் தாக்கத்தால் போக்குவரத்து வசதிக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு உதவும் வகையிலான நிழற்குடை அதிக பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு கிராமத்திற்கும் குறைந்தபட்சம் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நிழற்குடைகள் உள்ளன. பெயரளவில் மட்டுமே பராமரிப்பு நடக்கிறது. 95 சதவீத நிழற்குடைகளுக்கு வர்ண பூச்சு பணிகூட நடப்பதில்லை.கிராமங்கள் மட்டுமின்றி நெடுஞ்சாலைகளில் உள்ள நிழற்குடைகளும் பெருமளவு சேதம் அடைந்த நிலையில் அவ்வப்போது இடிந்து சிறு விபத்துகளை ஏற்படுத்த தவறுவதில்லை. இதனை அரசியல் கட்சிகளோ, தனிநபர் அமைப்புகளோ பெரிதுபடுத்தாமல் உள்ளனர்.
மது அருந்துவது, காத்திருக்கும் பெண் பயணிகளின் மீதான சீண்டல், வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் இப்பகுதியில் அரங்கேற தவறுவதில்லை. கண்காணிப்பு கேமரா , ரோந்து போலீசார் கண்காணிப்பு அம்சங்கள் இல்லாததால் இது போன்ற சமூக விரோத செயல்கள் தாராளமாக அரங்கேறி வருகின்றன.இவற்றை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள முன்வர வேண்டும்.
............
-- தேவை நடவடிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் நிழற்குடை பராமரிப்பு பணிகள் பெயரளவில் கூட நடப்பது இல்லை. கிராமங்களில் சேதமடைந்த நிழற் குடைகளை பராமரிப்பது சார்ந்து செலவினங்களை கூறி பணம் எடுக்கின்றனர். ஆனால் வர்ணப் பூச்சு சார்ந்த பணிகள் கூட மேற்கொள்வதில்லை. கூரை, பக்கவாட்டு சுவர்கள் இடிந்து சிறு விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலைகளில் உள்ள நிழற் குடைகளில் குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்துவதில்லை. இருள் சூழ்ந்த நிலையில் பல நிழற்குடைகள் திறந்தவெளி மது அருந்தும் பார்களாக , சமூக விரோத செயல்கள் அரங்கேறும் கூடங்களாக மாறும் அவல நிலை நீடிக்கிறது. கணபதி ,பா.ஜ., கிழக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளர், பலக்கனுாத்து .
...................
-

