/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லவே இல்லை ரோடுகள்: மனு கொடுத்தும் தீராத பிரச்னைகள் அல்லல்படும் திருப்பதி நகர் மக்கள்
/
இல்லவே இல்லை ரோடுகள்: மனு கொடுத்தும் தீராத பிரச்னைகள் அல்லல்படும் திருப்பதி நகர் மக்கள்
இல்லவே இல்லை ரோடுகள்: மனு கொடுத்தும் தீராத பிரச்னைகள் அல்லல்படும் திருப்பதி நகர் மக்கள்
இல்லவே இல்லை ரோடுகள்: மனு கொடுத்தும் தீராத பிரச்னைகள் அல்லல்படும் திருப்பதி நகர் மக்கள்
ADDED : அக் 10, 2024 06:14 AM

திண்டுக்கல் : பல ஆண்டுகளுக்கும் மேல் போடப்படாத ரோடுகள்,வாய்க்கால் இல்லாமல் சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்,எந்நேரமும் மக்களை கடித்து குதறும் கொசுக்கள்,மழை நேரங்களில் ரோட்டில் செல்லும் டூவீலர்களை தடுமாற செய்யும் மண் ரோடுகள்,குறைந்த மின்சாரத்தால் பழுதாகும் மின்சாதன பொருட்கள்,மனு கொடுத்தும் தீராத பிரச்னைகள் என ஏராளமான பிரச்னைகளில் திருப்பதி நகர் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
திண்டுக்கல் - கரூர்ரோடு திருப்பதி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராமன்,பொருளாளர் சுரேஷ்குமார்,துணைத் தலைவர் முருகம்மாள் கூறியதாவது: திருப்பதி நகர் பகுதியில் இதுவரை ரோடுகள் அமைக்கப்படவில்லை. மண் ரோடுகளிலே பல ஆண்டுகளாக பயணிக்கிறோம். மழை நேரங்களில் இங்குள்ள மண் ரோடுகள் சகதியாக மாறி டூவீலர்களில் செல்வோரை கீழே தடுமாறி விழச்செய்கிறது. இதோடு மட்டுமின்றி கார்களில் சென்றால் கார் டயர்கள் பள்ளத்தில் சிக்கிவிடுகிறது. அதிலிருந்து வெளியில் வரவே பெரும்பாடாய் உள்ளது. தெருவிளக்குகள் குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தோம் சரி செய்து தந்துள்ளனர். ஆனால் குறைந்தழுத்த மின்சாரம் விநியோக பிரச்னையால் வீட்டிலிருக்கும் குளிர்சாதன பெட்டிகள்,டிவி போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலை தொடர்கிறது. இப்பிரச்னை சரி செய்ய எங்கள் பகுதிக்கு டிரான்ஸ்பார்மர் வேண்டும் என கோரி மனு கொடுத்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பதால் பெரும் பிரச்னையாக உள்ளது. மழை நேரத்தில் மின்தடை ஏற்பட்டு மக்கள் இருளில் சிக்கி தவிக்கிறோம். விஷ பூச்சிகள் காலை இரவு பாராமல் உலாவுகின்றன. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக மனுக்கள் எழுதி எழுதி ஓய்ந்து விட்டோம். சாக்கடை இல்லாததால் எந்நேரமும் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் எங்கள் பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை நேரங்களில் சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு மழைநீர்,கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் இருப்பதால் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டிய அதிகாரிகள் எங்கள் பகுதியை மறந்து விடுகின்றனர். குப்பை வண்டிகள் வருவதே இல்லை. இதனால் ரோட்டோரங்களில் குப்பையை கொட்ட ரோடுகளில் பறந்து கிடக்கின்றன. குடிநீரும் இல்லாததால் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை தான் தொடர்கிறது. அருகிலிருக்கும் டாஸ்மாக்கை மாற்ற கிராம சபை கூட்டத்திலும் மனுக்கள் கொடுத்தோம். இதுவரை யாருமே கண்டு கொள்ளவில்லை என்றனர்.