/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கல் தொகுப்புகளில் வேட்டி,சேலைகள் வழங்கவில்லை; அதிகாரிகள் கவனம் செலுத்துவது அவசியம்

ADDED : ஜன 13, 2025 04:13 AM

வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகளில் வேட்டி சேலைகள் முறையாக வழங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை மக்களுக்கு வழங்குகிறது. இந்தத ஆண்டு வெல்லக் கட்டிகள் வழங்கவில்லை. அதற்கு பதிலாக சர்க்கரை வழங்கினர்.
அதேபோல் பொங்கல் வைப்பதற்கான, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களும் வழங்கவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகளில் வேட்டி, சேலைகள் முறையாக வழங்கவில்லை. இதனால் மக்கள் தவிக்கின்றனர்.
காலை முதல் மாலை வரை ரேஷன் கடை களில் மக்கள் காத்திருக்கின்ற போதிலும் கடை சி நேரத்தில் பொருட்கள் இல்லை ஏன்று கூறும் நிலையும் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.