/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு
/
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு
ADDED : டிச 09, 2024 05:57 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் தாராளமாக நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும். மழை வெயிலால் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான இடங்களில் கூரைகள் அமைக்க வேண்டும்.
ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டிற்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வருகின்றன.
இவற்றில் அதிகப்படியான பயணிகள் தினமும் பல்வேறு ஊர்களுக்கு செல்கின்றனர்.
டவுன் பஸ்கள் கிழக்குப் பகுதியிலும்,வெளியூர் செல்லும் பஸ்கள் மேற்குப் பகுதியிலும் நிறுத்தப்படுகின்றன. ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல நடைபாதைகள் உள்ளன.
இந்த நடைபாதைகளில் சிறு வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் நெரிசலுடன் நடக்க வேண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்ட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் சில அடிகள் அதிகரித்து பயணிகள் நடந்து செல்லும் வழியை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் வேகமாகச் சென்று பஸ்சை பிடிக்கும் நிலையில் உள்ள பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். சில கடைகளில் நடைபாதைகளில் நாற்காலிகளை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். வெளியூர் செல்லும் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அவதிப்படும் நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் கூரை வசதி செய்து தர வேண்டும்.