ADDED : அக் 23, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணா 50, ஹேமாமந்திநாயக் ஆகியோர் மதுரையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்சில் நேற்று சென்றனர்.
அதிகாலை 4:50 மணிக்கு ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்ற போது இருவரும் கீழே இறங்கினர்.
சிறிது நேரத்தில் பஸ் புறப்பட முதலில் ஹேமாமந்திநாயக் ஏறினார். இவரை தொடர்ந்து ஏறிய ஜெயா கிருஷ்ணா தவறி விழுந்து பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

