UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர், பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நவ.,12, 13 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10:30 முதல் மாலை 5:45 மணி வரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
இதில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்று ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கைகள், மொழி குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
