/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் விபத்தில் பலி 1நான்கு பேர் காயம்
/
கார் விபத்தில் பலி 1நான்கு பேர் காயம்
ADDED : ஜூன் 06, 2025 03:00 AM

வேடசந்துார்: வேடசந்துார் நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் திண்டுக்கல் நகராட்சி முன்னாள் தலைவர் பஷீர் அகமதுவின் பேரன் இறந்தார். அவரது மகன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் நகராட்சியாக இருந்த போது அப்போதைய தி.மு.க., தலைவராக இருந்தவர் பஷீர் அகமது. இவரது மகன் பஜில் ஹக் 39. மனைவி அமீனா பேகம் 35, மகன் நுாருல் அமீன் 12, இரு மகன்கள் என 5 பேர் அமீனா பேகத்தின் தாய் வீடான சேலத்திற்கு சென்றனர்.
மீண்டும் திண்டுக்கல் நோக்கி வந்தனர். காரை பஜில் ஹக் ஓட்டினார். வேடசந்துார் அருகே லட்சுமணன்பட்டி அருகே வந்தபோது முன் பக்க இடது டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. பஜில்ஹக் மகன் நுாருல் அமீன் 12, இறந்தார். பஜில் ஹக், ஆமினா பேகம், இரு குழந்தைகள் காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.