/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை வாங்கி தருவதாக பண மோசடி சென்னை ஜவுளி வியாபாரி மீது மேலும் ஒரு வழக்கு
/
வேலை வாங்கி தருவதாக பண மோசடி சென்னை ஜவுளி வியாபாரி மீது மேலும் ஒரு வழக்கு
வேலை வாங்கி தருவதாக பண மோசடி சென்னை ஜவுளி வியாபாரி மீது மேலும் ஒரு வழக்கு
வேலை வாங்கி தருவதாக பண மோசடி சென்னை ஜவுளி வியாபாரி மீது மேலும் ஒரு வழக்கு
ADDED : அக் 05, 2024 04:25 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வேலை வாங்கி தருவதாக ரூ.பல லட்சம் மோசடி செய்து சிறையில் உள்ள சென்னை ஜவுளி வியாபாரி முகமது சகாப்தீன்60, கல்வித்துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக மேலும் ஒருவர் புகாரளித்துள்ள நிலையில் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேடசந்துார் மாரம்பாடியை சேர்ந்தவர் இருதயராஜ்63. இவரது மகள் எம்.பி.ஏ.,படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார். 2023ல் இவர்கள் குடும்பத்தோடு வேடசந்துார் பகுதியில் துணிக்கடை ஒன்றிற்கு துணி எடுக்க சென்றனர். அங்கு சென்னை சீதக்காதி நகரை சேர்ந்த முகமது சகாப்தீன்60,என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் உங்கள் மகளுக்கு கல்வித்துறையில் வேலை வாங்கி தருகிறேன் என கூற அவரது வங்கி கணக்கில் ரூ.4 லட்சம்,நேரடியாக ரூ.3 லட்சத்தை இருதயராஜ் கொடுத்தார். நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராததால் சந்தேகமடைந்த இருதயராஜ் பணத்தை கேட்டார். இதன் பின் முகமதுசகாப்தீன் அலைபேசியை சுவிட்ச்ஆப் செய்து தலைமறைவானார்.
திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்க இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் 2024 செப்டம்பரில் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியை சேர்ந்த இருவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.பல லட்சம் மோசடி செய்ய வடக்கு போலீசார் கைது செய்தது தெரிந்தது. தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில் குற்றப்பிரிவு போலீசாரும் தனியாக வழக்கு பதிந்துள்ளனர். சிறையில் உள்ள முகமது சகாப்தீனை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.