UPDATED : நவ 16, 2026 06:22 PM
ADDED : நவ 16, 2026 06:22 PM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை ஒரே வாரத்தில் இரு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.30க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார் பகுதிகளில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த வாரம் வரை விளைச்சல் அதிகமாக இருந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்தும் அதிகரித்து இருந்தது. தற்போது விளைச்சல் குறைந்து உள்ளதுடன் தேவைக்கேற்ப வெண்டைக்காய் வரத்து இல்லை. இதனால் விலை நாளுக்குநாள் அதிகரித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் நேற்று ரூ.30க்கு விற்றது.
கமிஷன் கடை உரிமையாளர் கூறுகையில், ‘இனி வரும் நாட்களில் வரத்து குறை வாய்ப்புள்ளதால் விலை இன்னும் அதிகரிக்கும்’ என்றார்.
