ADDED : ஏப் 15, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., நகரச் செயலர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர் இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.