/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு; மறியல்
/
சாலையோர மரங்களை வெட்டியதற்கு எதிர்ப்பு; மறியல்
ADDED : அக் 19, 2024 05:07 AM

கோபால்பட்டி : திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இதில் பட்டுப்போன மரங்களை வெட்ட அஞ்சுகுழிபட்டியைச் சேர்ந்த நபர் செப். 2 ல் ஏலம் எடுத்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று கணவாய்பட்டி பகுதியில் உள்ள மரங்களை வெட்டினர்.
உயிருள்ள பட்டுப் போகாத மரத்தையும் சேர்த்து வெட்டி சாய்த்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று இரவு 9:15 மணிக்கு நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.

