/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியார் இடத்தில் குடிநீர் பணிக்கு எதிர்ப்பு
/
தனியார் இடத்தில் குடிநீர் பணிக்கு எதிர்ப்பு
ADDED : நவ 25, 2024 04:45 AM
வடமதுரை : குருந்தம்பட்டியை சேர்ந்த காங்.,பிரமுகர் குமரசண்முகவேல். 30 ஆண்டுகளுக்கு முன் புத்துார் ஊராட்சி தலைவராக இருந்தபோது துணை சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த நிலத்தை தானம் தந்து, வழிநடைக்கு அடுத்து இருக்கும் அரசு நிலத்தை பயன்படுத்த கூறினார்.
அதே கால கட்டத்தில் மற்றொருவரின் நிலத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி குமரசண்முகவேல்,நிலம் வழியே குழாய் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அரசு நிர்வாகத்தினர் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழி ஏற்படுத்தாமல் தனியார் இடத்தையே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மேல்நிலைத் தொட்டிக்கான குழாய் பாதையை மறுசீரமைப்பு பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட நேற்று காலை ஊராட்சி நிர்வாகத்தினர் மண் அள்ளும் இயந்திரத்துடன் அங்கு சென்றனர்.
ஆனால் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் தரப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன் நில உரிமையாளருடன் பேசி சமரசம் செய்ய பணி நடந்தது.
ஊராட்சி தலைவர் மஞ்சுளாதேவி கணேசன் (தி.மு.க.,) கூறுகையில்,குருந்தம்பட்டி காவிரி குடிநீர் திட்டத்திற்கு புதிய தொட்டி அனுமதி கிடைத்து உயரமான பகுதியில் இருக்கும் அரசு இடத்தில் கட்டப்பட உள்ளது.
அப்பணி முடிந்ததும் தனியார் இடத்தில் இருக்கும் பழைய தொட்டி அகற்றப்படும் என்றார்.