/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரவு நேர கிராம பஸ்கள் நிறுத்தம்; நித்தம் தவியாய் தவிக்கும் மக்கள் சிரமம்

ADDED : ஆக 09, 2024 06:44 AM

நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமங்களுக்கு செல்லும் இரவு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அதிக பொருள் செலவில் அதிக துாரம் சென்று கிராமங்களுக்கு வரவேண்டிய சூழலில் மக்கள் உள்ளனர்.
திண்டுக்கல் தலைமையிடமாக உள்ளதால் கிராம மக்கள் பல் வேறு தேவைக்காக திண்டுக்கல வந்து செல்கின்றனர்.பிற மாவட்ட பகுதிக்கு செல்லவும் திண்டுக்கல் வந்தே செல்கின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனும் திண்டுக்கல்லில் இருப்பதால் இரவிலும் மக்கள் அதிகளவில் வந்து செல்வர். பூ வியாபாரிகளும் இரவில் கிராமங்களுக்கு பஸ்களில் வந்து தங்கி அதிகாலையில் பூ வாங்கி செல்லும் சூழல் உள்ளது. கொரோனா காலத்திற்கு பின்பு மாவட்ட தலைநகர் திண்டுக்கல்லில் இருந்து கிராமங்களுக்கு இரவு செல்லும் பெரும்பாலான பஸ்களை நிறுத்திவிட்டனர் .பஸ் இல்லாததை காரணம் காட்டி ஆட்டோக்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. மன அழுத்தம் அதிகமாக இரவிலும் தகராறு தான் ஏற்படுகிறது. திண்டுக்கல்லில் இருந்து கிராமங்களுக்கு பழைய முறைப்படி இரவு நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.