/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
/
பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது
ADDED : மே 03, 2025 04:48 AM

பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
பழநி மேற்கு ரத வீதியில் உள்ள இக்கோயிலில் காலை 8:45 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பட்டர்கள் கார்த்திக், சீனிவாசன் கோபாலகிருஷ்ணன் ஏற்றினர்.
அதன்பின் லட்சுமி நாராயண பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இணைக் கமிஷனர் வெங்கடேஷ் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.
மே 8 மாலை 6:00 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் ,மே 10 காலை 7:31 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மே 11 இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

