தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

பழநி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

பழநி புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி


UPDATED : நவ 18, 2026 08:36 PM

ADDED : நவ 18, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 08:36 PM ADDED : நவ 18, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி:

‘பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்’ என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 6வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜேபி சரவணன் தலைமையில் பழநியில் நடந்தது. இதில் பங்கேற்ற பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அடுக்குமாடி வாகன பார்க்கிங் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு வியாபாரிகளை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

வியாபாரிகளுக்கு ஆயுள்கால லைசென்ஸ் தர வேண்டும். 25 நாட்களுக்குள் புதிய வணிகத்திற்கு அனுமதி வர வேண்டும். சாமானிய வியாபாரிகள் இருப்பு வைப்பதால் விலை ஏற்றம் ஏற்படவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகள் இருப்பு வைப்பதால் தான் செயற்கை விலை ஏற்றம் ஏற்படுகிறது. விலை ஏற்றம் குறித்து அரசாங்கமே கவலைப்படவில்லை. அது குறித்து வியாபாரிகளிடம் ஆலோசனைகளை கேட்கவில்லை.

மாநகராட்சி, நகராட்சி, அறநிலையத்துறை கடைகளின் வாடகை, மின் கட்டணம் அதிகமாக உள்ளது. இது விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைகிறது. தமிழக அரசின் சாதக பாதகங்களை தற்போது தெரிவிக்க முடியாது. ஜி.எஸ்.டி., வழிமுறைகள் சாதாரண வியாபாரிகளுக்கும் தெரியும் வகையில் மாற்ற வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us