/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் கும்பாபிேஷக பணிகள் துவக்கம்
/
பழநி கோயில் கும்பாபிேஷக பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 17, 2025 06:53 AM

பழநி; பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை நடந்தது.
முருகனின் மூன்றாம்படை வீடான பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2014ல் நடந்தது.
தற்போது கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற பாலாலய பூஜைக்காக நேற்று காலை 2ம்காலயாகம் நடைபெற்றது. இதில் விநாயகர், வாஸ்து, கலச பூஜைகள், அத்தி மரத்தில் பாலாலய பூஜை ஆகியவை நடைபெற்றது. கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வந்து உற்ஸவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கோயில் வட கிழக்கு திசையில் கோ பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. கோயில் திருப்பணிகள் ரூ.1 கோடி மதிப்பில் 5 மாதங்கள் நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.