/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் பஞ்சாமிர்தம் விற்பனை ரூ.15.86 கோடி
/
பழநி கோயில் பஞ்சாமிர்தம் விற்பனை ரூ.15.86 கோடி
ADDED : டிச 01, 2024 02:16 AM
பழநி:பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் நடப்பாண்டில் ஜூலை முதல் நவ. வரை ரூ.15.86 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது.
பழநி முருகன் கோயிலிலில் பக்தர்களின் வசதிக்காக கோயிலில் நான்கு இடங்கள், அடிவார பகுதியில் மங்கம்மாள் மண்டபத்தில் இரண்டு இடங்கள், தகவல் மையம், பூங்கா ரோடு, சுற்றுலா பஸ் நிலையம், ரோப் கார், வின்ச், பஸ் ஸ்டாண்ட், திருஆவினன்குடி உட்பட 13 இடங்களில் பஞ்சாமிர்த நேரடி விற்பனை நிலையங்கள் உள்ளன.
இங்கு 2023 ஜூலை 1 முதல் நவ. 30 வரை ஐந்து மாதங்களில் ரூ 11 கோடியே 49 லட்சத்து 87 ஆயிரத்து 540 க்கு விற்பனையாகி உள்ளது. நடப்பாண்டில் ஜூலை 1 முதல் நவ. 30 வரை ரூ.15 கோடியே 86 லட்சத்து 19 ஆயிரத்து 125க்கு பஞ்சாமிர்தம் விற்பனையாகி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.