ADDED : பிப் 25, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : நாகம்பட்டி ஊராட்சி அலுவலக கட்டடம் சேணன்கோட்டையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 15வது மாநில நிதி குழு மானிய நிதியில் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜம்மாள் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி முன்னிலை வகித்தார். தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். தாசில்தார் சரவணகுமார், பி.டி.ஓ., வீரகடம்புகோபு, உதவி பொறியாளர் தங்கவேலு, மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வி, ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி, ஊராட்சி துணைத் தலைவர் தாரணி, நிர்வாகிகள் தங்கவேல், கவிதாமுருகன், மாசி, கார்த்திகேயன், கார்த்தி, மருதபிள்ளை, சாகுல் ஹமீது, துரைபாபு, சுரேஷ், ஜெய பாஸ்கரன் பங்கேற்றனர்.