sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்

/

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்


ADDED : ஜன 28, 2025 05:50 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் 500க்கு மேற்பட்டோர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில் செட்டிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பபட்டி, பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, அடியனுாத்து, தோட்டனுாத்து முள்ளிப்பாடி என 8 ஊராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது, கலைஞர் வீடு கட்டும் திட்டம் கிடைக்காது. வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி உயர்வதோடு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் 8 ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கு மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.

அங்கு பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலர் சரத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.






      Dinamalar
      Follow us