ADDED : மார் 09, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியை சேர்ந்தவர் கண்ணன் 55. தாண்டிக்குடி ஊராட்சி செயலராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை கூடம் நகரில் நடைபெற்ற திட்டப்பணியை போட்டோ எடுக்க நண்பர் அர்ச்சுனனுடன் டூவீலரில் சென்றார்.
கூடம் நகர் ரோடு ஆபத்தான செங்குத்து சிமென்ட் ரோடு. பணியை முடித்து இருவரும் அந்த ரோட்டில் திரும்பி வந்தனர். தாழ்வான பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் கவிழ்ந்தது.
இதில் படுகாயம் அடைந்த கண்ணன் தாண்டிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். அர்ச்சுனன் லேசான காயத்துடன் தப்பினார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

