/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மீண்டும் வீடுகள் அதிர்வால் பீதி
/
திண்டுக்கல்லில் மீண்டும் வீடுகள் அதிர்வால் பீதி
ADDED : மார் 25, 2025 12:43 AM
வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், வடமதுரை, வேடசந்துார், சாணார்பட்டி பகுதிகளில் நேற்று காலை, 10:04 மணிக்கு பலத்த வெடிச்சத்தம் ஏற்பட்டது. வீடுகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இப்பகுதிகளில் சில வார இடைவெளியில் பலத்த வெடிச்சத்தம் ஏற்படுவது சில ஆண்டுகளாக தொடர்கிறது. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் பலத்த வெடிச்சத்தம் கேட்பது போல இருக்கும். இந்த சத்தம் 20 -- 40 கி.மீ., சுற்றளவில் கேட்கிறது.
நேற்று காலை, 10:04 மணிக்கு இப்பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது. வழக்கத்திற்கு மாறாக வீடுகளில் கூடுதலான அதிர்வு உணரப்பட்டது. தகர, ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகளில் அதிகளவில் தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில் வானில் பயிற்சி விமானமும் பறந்தது.
பலத்த வெடிச்சத்தம், அதிர்வு பிரச்னை இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெளிவான விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால் வெடிச்சத்தம் குறித்த அச்சம் மக்களிடம் நீடிக்கிறது.