ADDED : டிச 06, 2024 06:29 AM

ஒட்டன்சத்திரம்: தினமலர் செய்தி எதிரொலியாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து பாசன குளங்களுக்கு நீர் திறக்கப்பட்டது.
டிசம்பர் தொடங்குவதற்குள் வடகிழக்கு பருவமழையால் ஒட்டன்சத்திரம் பகுதி பாசன குளங்களுங்கு காட்றாற்று வெள்ளம் மூலம் நீர்வரத்து கிடைக்கும். இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையானது ஒட்டன்சத்திரம் சுற்றிய பகுதிகளில் குறைவாக பெய்ததால் இப்பகுதி நீர்நிலைகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பரப்பலாறு அணையில் இருந்து பாசன குளங்களுக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சத்திரப்பட்டி முத்து பூபாலசமுத்திரம் விருப்பாச்சி பெருமாள் குளத்திற்கு இந்த தண்ணீர் செல்கிறது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி , சுற்றிய ஊராட்சிகளிலும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
குளங்களுக்கு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 90 அடி கொண்ட இந்த அணையில் தற்போது 82 அடி தண்ணீர் உள்ளது.