/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் ரோடுகளில் திரியும் காட்டு மாடுகள் அச்சத்தில் பயணிகள்
/
'கொடை'யில் ரோடுகளில் திரியும் காட்டு மாடுகள் அச்சத்தில் பயணிகள்
'கொடை'யில் ரோடுகளில் திரியும் காட்டு மாடுகள் அச்சத்தில் பயணிகள்
'கொடை'யில் ரோடுகளில் திரியும் காட்டு மாடுகள் அச்சத்தில் பயணிகள்
ADDED : செப் 29, 2024 05:06 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் நகரில் ரோடுகளில் உலாவும் காட்டு மாடுகளால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இங்குள்ள நாயுடுபுரம் டிப்போ பகுதியில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கன்று குட்டிகளுடன் நெரிசலான போக்குவரத்து ரோட்டில் முகாமிட்டது. பொதுமக்கள், பயணிகளை தாக்க முற்பட்டது.
இதில் டுவீலர் , கார் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்தும் பாதித்தது. இதை பஸ், டூவீலரில் சென்றவர்கள் புகைப்படம் எடுத்தனர். மாடுகள் முட்டியதில் உள்ளுரை சேர்ந்த சிலர் காயமடைந்தனர்.
காட்டுமாடுகளால் உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டு பலியாவதும், காயமடையும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் நடமாடும் ரோட்டோரங்களில் சர்வ சாதாரணமாக நடமாடும் காட்டுமாடுகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வனத்துறை தனிக் குழு அமைத்து கண்காணித்தப் போதும் காட்டுமாடுகள் போக்குகாட்டுகின்றன. இனியாவது வனத்துறை இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' கொடைக்கானல் நகரில் காட்டுமாடுகள் நடமாட்டத்தை தடுக்க குழு அமைத்து கண்காணித்தப் போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அவ்வப்போது கூட்டமாக வரும் இவற்றால் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இது சம்மந்தமாக அவசர கூட்டம் நடத்தப்பட்டு காட்டு மாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.