/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பங்குனி உத்திரம், விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் பயணிகள் எதிர்பார்ப்பு

ADDED : ஏப் 11, 2025 05:32 AM
திண்டுக்கல்: பங்குனி உத்திரம், விடுமுறை நாட்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கோயில்களில் பங்குனி உத்திரம் இன்று கொண்டாடப்படுகிறது. அடுத்து சனி, ஞாயிறு ,விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்று குலதெய்வங்களை வழிபட்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனால் தென்மாவட்டங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
ஆனால் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு இடையே வழக்கமான எண்ணிக்கையில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் ,கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருந்து திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இதை கருதி பங்குனி உத்திரம், விடுமுறை நாட்களுக்கு பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.